
அஜித்தின் விருப்பம்:
தல அஜித் ஒருபக்கம் மாஸ் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும், மற்றொரு புறமோ யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் வரும் புத்தாண்டை முன்னிட்டு, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் யார் "மனதும் நோகாதபடி யார் மனதும் கோணாதபடி அவரவர் கடமையை செய்தாலே வாழ்க்கையில் சந்தோஷம் நீடிக்கும் இதுவே என் புத்தாண்டு விருப்பம் என அஜித் கூறியுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.
கீர்த்தியின் ஓவர் ஆசை:
இதேபோல் "நடிகையர் திலகம்" படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கை பயணத்தில் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்தது கீர்த்தி சுரேஷுக்கு.
மேலும் 2018 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகின தனிப்பட்ட முறையில் இது கீர்த்தி சுரேஷுக்கு மிக சிறப்பான ஆண்டாக அமைந்தது. நிறைய பயணங்கள், தோழிகள், குடும்பத்தினருடன் செலவிட்டது என வாழ்க்கை சந்தோஷமாக அமைந்தது. இதே போல் புதிதாக பிறக்கும் 2019 ஆம் ஆண்டு தனக்கு அப்படியே அமையும் என்று ஓவராக நம்புகிறாராம் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.