
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவருமே தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்கள். இவர்கள் நட்பாக பழகி வந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் முட்டிக் கொள்வது வழக்கம் தான்.
அதே நேரத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சிலர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் செய்து வருகின்றனர்.
விஜய் மகளுக்கு அட்வைஸ்:
இந்நிலையில் அஜித் விஜய் மகள் திவ்யாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் அஜித் மகள் அனோஷ்கா... பாட்மிட்டன் பயிற்சி எடுத்து வரும் இடத்தில் தான் விஜய் மகள் திவ்யாவும் பயிற்சி எடுத்து வருகின்றாராம்.
பயிற்சி தளத்தில் எதர்ச்சியாக திவ்யாவை சந்தித்த அஜித். அவரை அழைத்து நன்றாக விளையாடு எப்போது விளையாட்டை விட்டு விட கூடாது என்றும். விளையாட்டு உடலுக்கு மனதுக்கும் மிகவும் சிறந்தது என கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் இப்படி வெளிவந்துள்ள தகவல் உண்மையா? அல்லது வதந்தியா என தெரியவில்லை. இருப்பினும் கண்டிப்பாக அஜித் இவரை சந்தித்திருந்தால் இப்படி பேசி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.