
தமிழ் சினிமாவில் இன்று யாராலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள, நடிகர் அஜித் ஆரம்ப கட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் தான் இந்த இடத்திற்கு வந்தார்.
சினிமா துறையைச் சார்ந்த யாருடைய உதவியும் இல்லாமல், பட வாய்ப்புக்காக அலைந்து, பல்வேறு கஷ்டங்களை தாண்டி, பட வாய்ப்புகளை பெற்று, தன்னுடைய முழு திறமையால் மட்டுமே இந்த வெற்றியை சாத்தியமாக்கினார் அஜித். இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கும்.
விடாமுயற்சி, நம்பிக்கை, போன்றவற்றிற்கு இவர்தான் முன்னுதாரணம் என அஜித் ரசிகர்கள் பலரும் அவரை பற்றி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். மேலும் சினிமாவைத் தாண்டி, பைக் ரேசிங், கார் ரேசிங் போட்டோகிராபி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
இவர் நடித்து வெளியாகும், ஒவ்வொரு படத்திற்கும் அஜித் ரசிகர்கள் தங்களுடைய மாஸ் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்கும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 125 கோடிக்கு மேல் தமிழகத்தில் மட்டும் 'விஸ்வாசம்' கலெக்சன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அஜித் படவாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தபோது, பிரபல கால் அணி நிறுவனத்தின், விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில், துரு துரு வென, ஆடல், பாடல் என கலக்கியுள்ளார்.
அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.