ரஜினியின் இரண்டாவது மகளின் இரண்டாவது திருமணம்! பிப்ரவரியில் டும் டும் டும்!

Published : Jan 23, 2019, 11:59 AM ISTUpdated : Jan 23, 2019, 12:10 PM IST
ரஜினியின் இரண்டாவது மகளின் இரண்டாவது திருமணம்! பிப்ரவரியில் டும் டும் டும்!

சுருக்கம்

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு பிப்ரவரி 10  ஆம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது.   

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு பிப்ரவரி 10  ஆம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. 

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பின் தன்னுடைய மகனை பெற்று எடுக்க அம்மாவின் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா... கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பெற்றோருடன் தங்கி விட்டார். ஆரம்பத்தில் இவர்களை  சேர்ந்து வைக்க பலர் போராடியும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் அஸ்வின் இருவரும் மனமுவந்து இந்தப் பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

தற்போது சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.  விவாகரத்துக்கு பின் தன்னுடைய கவனம் முழுவதையும் திரைப்படங்கள் இயக்குவது, அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் செலுத்தினார்.

இந்நிலையில் தற்போது, சௌந்தர்யா ரஜினிகாந்த் கோவை தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவரை சௌந்தர்யா, காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டு தரப்பினரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில்,  தற்போது விசாகனுக்கும் - சௌந்தர்யாவிற்கும், பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளதை உறுதி செய்துள்ளனர்.  இதனால் சௌந்தர்யாவிற்கு பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!