
ஐஸ்வர்யா ராய் என்றாலே அது உலகழகி தான் ... உலகழகி என்றாலே அது ஐஸ்வர்யா ராய் தான் என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் என்றுமே அவர் உலகழகி தான்....
ஆண்டுதோறும் எத்தனை அழகிகள் தேர்ந்தெடுத்தாலும்,இன்றும் அவர்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ..
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்....உலகிற்கே அழகாக தெரிந்த ஐஸ்வர்யா ராய்....குடும்பத்தில் உள்ளூர் கிழவியாக தான் உள்ளார் ..
காரணம் :
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்,, தனது மகளை மாமியார் ஜெயா பச்சன் அருகில் செல்லவிடாமல் பார்த்துக் கொள்கிறாராம்.பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று பலகாலமாக கூறப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே....
அதனை நிரூபிக்கும் விதமாக தன் விஷயத்தில், ஜெயா பச்சன் மூக்கை நுழைப்பது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லையாம்.இந்நிலையில் தன் மகள் ஆராத்யாவை பாட்டி ஜெயா அருகிலேயே விடுவது இல்லையாம் ஐஸ்.ஆராத்யா ஜெயா பச்சனுடன் இருக்கும் ஒரு புகைப்படம் கூட இல்லை. ஆனால் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படங்கள் ஏராளம் உண்டு.
இதற்கு ஐஸ்வர்யா தான் காரணமாம்.ஐஸ்வர்யா வீட்டில் இருந்தால் அவர் தான் ஆராத்யாவை பார்த்துக் கொள்வார். ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் தனது அம்மாவை அழைப்பாரே தவிர மாமியாரை கூப்பிட மாட்டார் என அவருடைய நட்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.