
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் வெளியான "காக்கா முட்டை" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்கிற பெயரையும் பெற்று தந்தது.
எனவே தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து ஓடிடியில் வெளியான 'திட்டம் இரண்டு' திரைப்படம் மற்றும் சமீபத்தில் விஜய் டிவியில் நேரடியாக வெளியான பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்ட துவங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கிளாமரையும் கையில் எடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் பாலிவுட் படமான டாடி படத்தில் அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் ரீமேக்காகவும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.. இந்த படம் ஜியோ பேபி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதே வேளையில் இந்தியக் குடும்ப பெண்களின் நிலை குறித்து பகிரங்கமாக எடுத்துரைத்த இந்த பலம் பலதரப்பட்ட விமரிசனங்களுக்கு உள்ளது.
அதோடு தலைப்பில் தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.