Vijayakanth : கடவுளே.. கேப்டனுக்கா இந்த நிலை? நேரில் பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்.! உருக வைக்கும் வீடியோ!

Published : Jan 03, 2022, 01:30 PM ISTUpdated : Jan 03, 2022, 04:27 PM IST
Vijayakanth : கடவுளே.. கேப்டனுக்கா இந்த நிலை? நேரில் பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்.! உருக வைக்கும் வீடியோ!

சுருக்கம்

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (vijayakanth) இந்த வருட புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்த வீடியோ (Viral video) தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பார்க்கப்பட்டு வருகிறது.  

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இந்த வருட புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்த வீடியோ தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பார்க்கப்பட்டு வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, கடந்த 2014ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் எடுத்த பின்னரும், அவரது உடல் நிலை மோசமாகிக்கொண்டே சென்றதால், மனைவி, பிரேமலதா, மற்றும் மகன்களுடன் சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்தார். இதில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும் அவரது உடல் நலன் கருதி எந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது சீரான உடல்நிலையுடன் விஜயகாந்த் உள்ளதாலும், அவர் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க விரும்பியதாலும் , அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் சந்திக்க புத்தாண்டு தினத்தன்று, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

எப்போது கேப்டனை பார்ப்போம் என ஏங்கி கிடைத்த ரசிகர்கள், மற்றும் தொண்டர்கள் பலர் கண்குளிர இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் பார்த்து சென்றனர்.  விஜயகாந்தும் வெகு நாட்களுக்கு பின் பார்க்கும், ரசிகர்களையும், தொண்டர்களையும் அமர்ந்த இடத்தில் இருந்தபடியே... கை கூப்பி வரவேற்றார் விஜயகாந்த். கேப்டன் என கோஷங்கள் எழுப்பியபோது மிகவும் உட்சாகமாக கை அசைத்தது, ரசிகர்களையும் உட்சாகமடைய செய்தது. விஜயகாந்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்த நிலையில்,  அவர்களை வெறும் கைகளோடு அனுப்பாமல் 100 ரூபாய் பரிசையும் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.

கொரோனா பரவல் காரணமாக, விஜயகாந்த் அருகில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து தொண்டர்களை சந்தித்த விஜயகாந்தை கடவுள் என்றும், உங்களுக்கா இப்படி ஒரு நிலை என... சில ரசிகர்கள் கண் கலங்கியபடி கடந்துசென்றதையும் பார்க்க முடிந்தது. தற்போது இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

வெளிநாட்டுக்கெல்லாம் சிகிச்சை பெற்று திரும்பிய கேப்டன் மீண்டும் பழைய படி கம்பீரமாய் வருவார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்கள், தங்களை பார்த்து கையசைக்கவும் சிரிக்கவும் கூட கஷ்டப்படும் அவரைப் பார்த்து கதறிவிட்டனர். தொண்டர்களோடு தோள்கொடுத்து நின்ற கேப்டன் இன்று அருகில் நெருங்கினால் கூட நோய்த் தொற்று வந்திடுமோ என்று அஞ்சும் நிலைக்கு ஆளாகிவிட்டாரே என்று கண்கலங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?