படுக்கைக்கு மறுத்ததால் பறிபோன பட வாய்ப்பு! மாநிறத்தால் நிராகரிப்பு, ஐஸ்வர்யா ராஜேஷின் வலி நிறைந்த வெற்றி!

By manimegalai aFirst Published May 25, 2020, 7:35 PM IST
Highlights

தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நடிகையாக இருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் பிரபல தனியார் ஊடகம் ஒன்றில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நடிகையாக இருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் பிரபல தனியார் ஊடகம் ஒன்றில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இன்று கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வளர்ந்து வந்ததற்கு பின்னால் உள்ள வலி வேதனைகளை பகிர்துள்ளார். மேலும் திரையுலகில் காலடி எடுத்து வைக்க நினைத்த போது, நிராகரிக்கப்பட்டது முதல் பாலியல் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானது வரை கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய 8 வயதில், அப்பாவை இழந்துள்ளார். இதன் பின்னர் குடும்பத்தின் ஒட்டு மொத்த சுமையையும் ஏற்று அவருடைய அம்மா வழி நடத்தி வந்துள்ளார். துணிக்கடையில் வேலை செய்தும், எல்.ஐ.சி ஏஜெண்டாகவும் பணியாற்றி தன்னுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துள்ளார். 

காதல் பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் 12 வயதில் இருந்த போதே... ராகவேந்திரா என்கிற அவருடைய அண்ணன் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இவரை தொடர்ந்து, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்து, வேலைக்கு செல்ல இருந்த நேரத்தில் திடீர் என இரண்டாவது அண்ணன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த எதிர்பாராத மரணங்கள் அடுத்தடுத்து நிகழவே, ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா மிகவும் மனம் நொந்து இடிந்து போனார்.

பின்னர், கடையின் முன் நின்று மார்க்கெட்டிங் வேலை... அங்கரிங், போன்றவை செய்து தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு. மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் மாறினார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை வைத்து கொண்டு ஒவ்வொரு பிலிம் புரோடுக்ஷன் கம்பெனிகளில் ஏறி இறங்கியுள்ளார். 

அப்போது எடுத்ததுமே பலர், பாலியல் இச்சையோடு பேசியதாக வெளிப்படையாக கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனால் பல படவாய்ப்புகள் இவரின் கைகளில் இருந்து நழுவியது.  இதையும் தாண்டி, தன்னுடைய நிறம், ஹீரோயின் டிசைன் இல்லை என்றும் தமிழ் மொழி பேசுவதால் கூட பலர் தன்னை நிராகரித்துள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்.

பின்னர் இவை அனைத்தையும் கடந்து,  கிடைத்த படம் தான் 'அவர்களும் இவர்களும்'. இந்த படத்தை தொடர்ந்து, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்தேன். இதை தொடர்ந்து பல நடிகைகள் ஏற்று நடிக்க மறுத்த, 'காக்கா முட்டை' படத்தில்  இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன் என்றும், அந்த படம் தான் தன்னுடைய நடிப்பிற்கு முழு அங்கீகாரமாக அமைந்தது.

இதை தொடர்ந்த தற்போது, தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறேன்.  கனா படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனரிடம் கெஞ்சி அந்த வாய்ப்பை பெற்றேன். அந்த படத்தில் நான் தான் ஹீரோ என பெருமையாய் பேசியுள்ளார். மேலும் உங்களை நீங்களே தான் பாதுகாத்து கொள்ள வேண்டு அதே சமயத்தில் வளர வேண்டும் என கூறி தன்னுடைய வளர்ச்சிக்கு பின்னால் உள்ள வலிகளை பகிர்துள்ளார்.

click me!