
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து அனைத்து மொழி நடிகைகளும் தங்களுடைய மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட உலக அழகி ஐஸ்வர்யா ராய் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு சிலர் அழைப்பது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறுகையில்... "நான் சீக்கிரமே உலக அழகி பட்டம் வென்று விட்டேன். ரசிகர்கள் என்னை பற்றி முழுமையாக தெரிந்து வைத்துள்ளனர். எனது உடைகள் மற்றும் மேக்கப் பற்றி விமர்சனங்கள் வருகிறது. அதை நான் எப்போதுமே பொருட்படுத்துவது இல்லை.
மேலும் எனக்கு எது பற்றியும் பயம் கிடையாது. திரையுலகில் சம்பள விஷயத்தில் பாகுபாடு உள்ளது என்றும் நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தருகிறார்கள் என்றும் பேச்சு உள்ளது.
குறைந்த சம்பளம் தருபவர்கள் படங்களில் நடிக்க கூடாது என்று முடுவு எடுக்க வேண்டும். சில நடிகைகள் குறைந்த சம்பளத்தில் கூட நடிக்க முன் வருகிறார்கள். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேச்சு கிளம்பி உள்ளது. நான் அதுபோன்ற பிரச்னையை சந்தித்தது இல்லை. சக நடிகைகள் இது குறித்து பேசும்போது நான் சும்மா இருக்க முடியாது.
பாலியல் தொல்லைகளை எதிர்த்து ஹாலிவுட் நடிகைகள் 'மீடு' என்கிற இயக்கத்தை தொடங்கி இருப்பதை நான் வரவேர்ப்பதாக தெரிவித்தார். எல்லா துறையிலும் நல்லது கெட்டது என இருக்கிறது. நாம் எதை தேர்வு செய்கிறோம் என்பது முக்கியம். பிடிக்காதவற்றை செய்யக்கூடாது என ஐஸ்வர்யாராய் கூறினார்".
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.