
இறந்துபோன பிரபல நடிகையை கை காட்டிய சுந்தர் சி..! குஷ்பூவை மணக்க வில்லை என்றால் இவரை தானாம்..!
குஷ்பூ என் மண வாழ்கையில் வர வில்லை என்றால் நான் நடிகை சவுந்தர்யாவை தான் திருமணம் செய்து இருப்பேன் என மிகவும் உருக்கமாக தெரிவித்து உள்ளார்
பிரபல இயக்குனரான சுந்தர் சி நடிகை குஷ்பூவை திருமணம் செய்துக் கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசினார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் சில நடிகைகளின் புகை படங்களை காட்டி கருத்து கேட்கப் பட்டது
அதில் இடம் பெற்ற நடிகை சௌந்தர்யா போட்டோவை பார்த்த உடன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு உள்ளார் சுந்தர் சி
அதாவது " குஷ்பூ என் வாழ்கையில் வரவில்லை என்றால் இந்த பெண்ணை தான் திருமணம் செய்திருப்பேன் என அவர் தெரிவித்து உள்ளார்
அந்த அளவிற்கு நடிகை சௌந்தர்யாவை எனக்கு பிடிக்கும் என தெரிவித்து இருந்தார். எப்போதுமே நடிகை சௌந்தர்யாவுடன் அவரது அண்ணன் உடன் இருப்பார். விமான விபத்தில் இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்தே இறந்துவிட்டனர் என உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார் சுந்தர் சி.
இதற்கு முன்னதாக, நடிகை குஷ்பூ தனக்கும் பிரபுக்கும் அழகான உறவு இருந்தது உண்மை தான் என சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, சுந்தர் சி நடிகை சவுந்தர்யாவை கை காண்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.