விஜய் ஆண்டனி-ன் காளி திரைப்படத்தின் முதல் 7 நிமிடங்கள் இணையத்தில் வெளியாகியது

Asianet News Tamil  
Published : May 16, 2018, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
விஜய் ஆண்டனி-ன்  காளி திரைப்படத்தின் முதல் 7 நிமிடங்கள் இணையத்தில் வெளியாகியது

சுருக்கம்

first 7 minutes of latest Tamil movie got released

விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் காளி. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் மனைவி , கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், சஸ்பென்ஸ் என பன்முகங்களை கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சுனைனா, அஞ்சலி, மதுசூதன் ராவ், யோகி பாபு ,நாசர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

மே 18 அன்று இந்த திரைப்படத்தை வெளியிட காளி படக்குழு முடிவு செய்திருக்கிறது. முன்னதாக பிரமோஷனுக்காக இந்த திரைப்படத்தின் முதல் 7 நிமிட வீடியோவை விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு மருத்துவராக நடித்திருக்கிறார். அவருக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் கனவில் வந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு நாள் அவரது அம்மா என அவர் இத்தனை நாள் நம்பியவர் தன்னை பெற்ற அம்மா அல்ல, வளர்த்தவர் தான் எனும் உண்மை அவருக்கு தெரியவருகிறது. அதனை தொடர்ந்து அவருக்கு வரும் கனவுகளுக்கும், அவரது நிஜ வாழ்க்கையின் உண்மைகளுக்கும் இடையேயானது தான் காளி படத்தின் மீதிக்கதை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!