"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் இவர் நடித்தாலும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.
"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் இவர் நடித்தாலும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை.
இந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே நடிகர் மஹத்துடன், ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் இவரிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை யார் என கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு ஐஸ்வர்யா தத்தா ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தனக்கு பிடித்தது நடிகர் சிம்பு என்றும், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தனக்கு சிம்புவை பிடிக்கும் என கூறினார். மேலும் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். ஆனால் இதை சிம்புவை நேரில் பார்த்து போது கூட அவரிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு பிடித்த நடிகைகள் இரண்டு பேர் என்றும் அவர்களில் ஒருவர் நடிகை நயன்தாரா என்றும் மற்றொருவர் 'அருவி' படத்தில் நடித்த நடிகை அதிதி பாலன் என்றும் தெரிவித்துள்ளார்.