மொத்த மெயின் தியேட்டர்களையும் அட்ச்சி தூக்கிய தல அஜித்!! மிச்சம் சொச்ச டம்மி தியேட்டர்களில் பேட்ட

By sathish kFirst Published Dec 16, 2018, 1:51 PM IST
Highlights

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி 10 அன்று பேட்ட - விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர் இரு தயாரிப்பாளர்களும்.

2019 ம் வருடம் பொங்கல் பண்டிகையொட்டி  அஜித் குமார் நடித்துள்ள விஸ்வாசம் ரிலீஸாக உள்ளது. இது ஏற்கனவே பிளான் போட்டபடி நடந்து வருகிறது. ஆனால் ரஜினியின் பேட்ட  எப்போது ரிலீஸ் என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் இறுதியில் ரஜினி நடித்த 2.0 ரிலீஸ் ஆனதால் பேட்ட ஏப்ரல் மாதம்  வெளியிடுவார்கள் என சொல்லப்பட்டது.

பிரமாண்ட கூட்டணி, பெரிய படம் என்ற அடையாளத்தோடு வெளியான 2.0 குறைந்த பட்சம் ஒரு மாதமாவது ஓடி கல்லாக காட்டும் என நம்பினார்கள். அனால், படம் வெளியான அடுத்த நாளிலிருந்தே தியேட்டரில் காத்து ஓட ஆரம்பித்தது. அதனால் பெரிய படம் எதுவும் இல்லாததால் தீபாவளிக்கு விஜய் படம் சர்கார் வெளியானதைப்போல பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாவதாக இருந்தது. 

விஸ்வாசம் படத்தின் வியாபாரம் ஏற்கனவே முடிந்து விட்டதால் அப்படத்தின் ஏரியா விநியோகஸ்தர்கள் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலைகளில் தீவிரம் காட்டி வந்தனர். மினிமம் கேரண்டி அல்லது அதிக பட்ச அட்வான்ஸ் அடிப்படையில் மதுரை, சேலம் விநியோகப் பகுதிகளில் விஸ்வாசம் படத்திற்கான தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு பிற விநியோகப் பகுதிகளில் விஸ்வாசம் படத்திற்கு தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்ய தொடங்கினர். இந்நிலையில் தான் பேட்ட படம் பொங்கல் ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு தியேட்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஸ்வாசம் படம் மட்டும் என்றிருந்த நிலையில் அப்படத்தின் விநியோகஸ்தர்களின் விருப்பப்படி தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த நிலையை பேட்ட படம் மாற்றியிருக்கிறது. இப்போது திரையரங்குகள் விருப்பப்படி இரு படங்களின் விநியோகஸ்தர்கள் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொங்கல் போட்டியில் விஸ்வாசம் படம் முதல் இடத்தில் இருப்பதாக தியேட்டர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தமிழகத்திலேயே பெரிய ப்ளக்ஸ் பேனர் வைக்க கூடிய வசதி இருக்கும் சென்னை சத்யம் தியேட்டர், மற்றும் கோயம்பேடு ரோகினி, பரங்கிமலை ஜோதி போன்ற தியேட்டர்களின் முகப்பில் விஸ்வாசம் பேனர்  பொருத்தப்பட்டுள்ளது. இந்த ப்ளக்ஸ் பேனர் பொருத்துவதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் தாக்கம் தமிழகத் திரையரங்குகளில் எதிரொலிக்கும்.

இதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் சேலம் மாவட்ட அஜித் ரசிகர் மன்றத் தலைவரும், பிரபல விநியோகஸ்தருமான 7 G சிவா. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றவர் ரஜினி மிரப்பெரிய நிறுவனமான சன் பிக்சர்ஸ், இளம் நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ள பேட்ட. எந்த எக்ஸ்ட்ராபிட்டிங்கும் இல்லாமல் தல அஜித்  தனியாக களமிறங்கும் விஸ்வாசத்தோடு போட்டிக்கு உள்ளது.

click me!