அம்மாவை காரணம் காட்டி அராஜகத்தை ஆரம்பித்த ஐஸ்வர்யா..! கொந்தளித்த பாலாஜி..!

Published : Sep 04, 2018, 12:38 PM ISTUpdated : Sep 09, 2018, 07:25 PM IST
அம்மாவை காரணம் காட்டி அராஜகத்தை ஆரம்பித்த ஐஸ்வர்யா..! கொந்தளித்த பாலாஜி..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் முழுவதும் பாச மழை பொழிந்து வந்தனர் போட்டியாளர்கள். இந்த வாரம் என்ன நடக்கும் என்பது பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. மேலும் சில நாட்களாக யாரிடமும் வாயை விடாமல் சற்று அடக்கி வாசித்து வந்த ஐஸ்வர்யா மீண்டும் தன்னுடைய வேலையை துவங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில்... ஐஸ்வர்யா பாலாஜியிடம் நீங்கள் என் முன்னாடி என்ன பேசுகிறீர்கள் பின்னால் சென்று என்ன பேசுகிறீர்கள் என்பது தனக்கு நன்றாக தெரியும் என கூறுகிறார். இதனால் மிகவும் டென்ஷன் ஆன பாலாஜி உன் பின்னால் சென்று நான் என்ன பேசினேன் என கொதிதெழுகிறார். 

அவரிடம் தன்னுடைய அம்மா வந்து மனிப்பு கேட்டதை சுட்டி காட்டி பேசுகிறார் ஐஸ்வர்யா. இதற்கு பாலாஜி உங்க அம்மாவை வந்து நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா...? ஒருவேளை உங்க அம்மா வந்து மன்னிப்பு கேட்டது பிடிக்க வில்லை என்றால் யார் இவங்க ஏன் மன்னிப்பு கேட்குறீங்க என கூற வேண்டியது தானே..? கேட்டை தாண்டி போகிவிட்டால் எல்லோரும் வேறு வேறு தான் என கூறுகிறார்.

இதன் மூலம், மீண்டும் ஐஸ்வர்யா தன்னுடைய அராஜகத்தை ஆரம்பித்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா மீது ஏகப்பட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள். இந்த வாரம் எவிக்சன் லிஸ்டில் இவர் இடம்பிடித்து விட்டதால் இவரை கண்டிப்பாக வெளியேற்றுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Siragadikka Aasai : சிந்தாமணியின் திருவிளையாடல் ஆரம்பம்... ரோகிணியிடம் சிக்கப்போகும் மனோஜ்