உயிரோடு இருக்கும் தாயை இறந்து விட்டதாக கூறிய ஐஸ்வர்யா..? மகளால் அம்மா பட்ட அசிங்கம்..!

Published : Sep 02, 2018, 02:03 PM ISTUpdated : Sep 09, 2018, 07:58 PM IST
உயிரோடு இருக்கும் தாயை இறந்து விட்டதாக கூறிய ஐஸ்வர்யா..? மகளால் அம்மா பட்ட அசிங்கம்..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இளம் வயது போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா. ஆரம்பத்தில் இவருக்காக ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்த நிலையில், நாளுக்கு நாள்  இவரின் நடவடிக்கைகள் மாற ஆர்மியை மூட்டை கட்டி வைத்து விட்டு. மற்ற போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்ய துவங்கி விட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இளம் வயது போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா. ஆரம்பத்தில் இவருக்காக ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்த நிலையில், நாளுக்கு நாள்  இவரின் நடவடிக்கைகள் மாற ஆர்மியை மூட்டை கட்டி வைத்து விட்டு. மற்ற போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்ய துவங்கி விட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில், ஒரு முறை ஐஸ்வர்யா பாலாஜியும் தன்னுடைய அம்மா இறந்து விட்டதாக கூறிய தகவல் பலரையும் அதிர்சியாக்கியுள்ளது. இந்த செய்தி பரவலாக பரவியதால் பலர் ஐஸ்வர்யா மீது பரிதாபப்பட்டனர். ஆனால் இவர் கூறியது பொய் என தெரிய வந்தபோது பலருக்கும் இவர் மீது கோவம் தான் அதிகரித்தது.

மேலும் ஐஸ்வர்யா இப்படி கூற முக்கிய காரணம் அவரின் அம்மா என்றும் கூறலாம். ஆம் அவருடைய அம்மா இவரை பணம் தரும் ஒரு பொருளாக மட்டுமே பாவிதாராம். 10 ஆம் தேதிக்குள் அவருக்கு கொடுக்க வேண்டிய பணம் வந்து சேராவிட்டால் பேய் ஆட்டம் ஆடி விடுவாராம். இதனால் அவருக்குள் ஏற்பட்ட விருப்பு, வெறுப்பு தனக்கு அம்மாவே இல்லை என்று அவர் வார்த்தைகளில் பிரதிபலித்தது.

ஐஸ்வர்யா அம்மா பேச்சு:

இந்நிலையில் நேற்றைய தினம், பிக்பாஸ் மேடையில் பேசிய ஐஸ்வர்யாவின் அம்மாவிற்கு இந்த கதை எதுவும் தெரியாததால், தன்னை ஒரு தியாகி என்று நினைத்து மகள் பற்றி மிகவும் உருக்கமாக பேசினார். இவர் பேசிய விதம் அருமையாக இருந்தாலும். மகள் சொல்வது உண்மையா? அல்லது இவர் சொல்வது உண்மையா என தெரியாமல் ரசிகர்களே குழம்பி விட்டார்கள். அதே போல் ஐஸ்வர்யா இவரை பற்றி மிகவும் மோசமாக கூறியுள்ளதால் அது இவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

மகளுக்காக மன்னிப்பு:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராட்சஷி போல் நடந்து கொண்டு அனைத்து ரசிகர்களின் வெறுப்பையும் பெற்றிருக்கும் தன்னுடைய மகள், செய்த தவறுக்காக அவருடைய தாய் மன்னிப்பு கேட்டார். இவரின் மன்னிப்புக்கு கமல் "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னையும் செய்து விடம்... என்கிற குரல் மூலம் பதில் கொடுத்தார்.

ஐஸ்வர்யாவின் தாய் மகளை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற இப்படி பேசி இருந்தாலும், ஐஸ்வர்யாவை இறுதிக்கு அனுப்ப கூடாது என்பது ரசிகர்கள் மட்டும் அல்ல போட்டியாளர்களும் மிகவும் உறுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!
கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!