இது என்ன உதயநிதிக்கு வந்த சோதனை? 'மாமன்னன்' படத்தை வைத்து ஸ்கோர் பண்ணும் அதிமுக! அன்றே ஜெ, செய்த தரமான சம்பவம்

By manimegalai a  |  First Published Jun 29, 2023, 6:34 PM IST

'மாமன்னன்' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை வெளியிட்டு, அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா செய்த தரமான சம்பவத்தை நினைவு படுத்தி ஸ்கோர் செய்து வருகிறார்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள்.
 


இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்தில் இருந்தே... இருதரப்பு சாதியினருக்கு இடையே உள்ள வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக, படம் எடுத்து வருகிறார். அதே போன்ற கருத்தை ஆணித்தமனாகவும், மனிதர்களுக்குள் ஏற்ற தாழ்வு வேண்டாம் என்றும், அனைவரும் சமம் என்பதை கூறும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது 'மாமன்னன்' திரைப்படம். தமிழகத்தில் சுமார் 600 திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படம், காலை முதலே... ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் தொடர்ந்து  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை உதயநிதி நடித்த படங்களை விட, இப்படத்தில் அவரின் மாறுபட்ட நடிப்பை பார்க்க முடிந்ததாக கூறி வரும் ரசிகர்கள், வடிவேலு தன்னுடைய தன்னிகரற்ற நடிப்பின் மறுபக்கத்தை 'மாமன்னன்' படத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என, தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். மேலும் படம் வெளியாகும் முன்னர், 'மாமன்னன்' படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கியவர்கள் கூட, தற்போது சைலன்ட் மோடுக்கு சென்று விட்டனர்.

Tap to resize

Latest Videos

'மாமன்னன்' பூர்த்தி செய்துவிட்டது..! இனி நான் நடிக்க வாய்ப்பில்லை மீண்டும் அடித்து கூறிய உதயநிதி..!

இந்நிலையில், மாமன்னன் படத்தில்... வடிவேலு சபாநாயகர் பதவி ஏற்பது போல் கிளைமேக்ஸ் காட்சியில் காட்டப்பட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு, முன்னாள் சபாநாயகர் ப.தனபாலை நினைவு படுத்துகிறது இந்த காட்சி என்று, அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெருமைகளை பேசி வருகிறார்கள். 

என் அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அசிங்கமா கேட்டாங்க! குமுறும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் ஸ்வாதி ஷர்மா!

சிறு வயதில் இருந்தே பல்வேறு போராட்டங்களுக்கு பின், அரசியலில் படிப்படியாக முன்னேறி, 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ப. தனபால். இதை தொடர்ந்து 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு அரசமைத்த அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக அவருக்கு பதவி வழங்கினார் ஜெயலலிதா.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்ற போது,  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். இதில் சபாநாயகர் வேட்பாளராக அருந்ததியர் சமூதாயத்தை சேர்ந்த ப. தனபால் அறிவிக்கப்பட்டார். துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி, ஜெயராமன் அறிவிக்கப்பட்டார். சபாநாயகருக்கான தேர்தலில் வெற்றி பெற்று, பதவியையும் வகித்தார். சாதி... என்பதை கடந்து அன்றே சபாநாயகர் அரியாசனத்தில் ஜெயலலிதா ப.தனபாலை அமர வைத்து அழகு பார்த்த தரமான சம்பவம் அரங்கேறியுள்ளதால்.. 'மாமன்னன்' படத்தின் காட்சியை வைத்து அதிமுக ஸ்கோர் செய்து வருகிறது.

பிரபல பாடகிக்கு ICU-வில் தீவிர சிகிச்சை! உடல் நிலை கவலைக்கிடம்..? அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!

ஆளும் கட்சியின் அமைச்சர் நடிப்பில் வெளியான படத்தை வைத்தே ... அதிமுக தங்களின் அருமை பெருமைகளை கூறி வருவதால், நெட்டிசன்கள் இது என்னடா உதயநிதிக்கு வந்த சோதனை என்பது போல் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

அனைத்திற்கும் முன் உதாரணம்
அஇஅதிமுக 🔥 pic.twitter.com/hgbiSY95dS

— AIADMK TV (@aiadmktv)

 

click me!