வேலைக்காரனுக்கு பிறகு மீண்டும் பொன்.ராமுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்…

 
Published : Jun 10, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
வேலைக்காரனுக்கு பிறகு மீண்டும் பொன்.ராமுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்…

சுருக்கம்

after velaikaran Sivakarthikeyan joins with poRam

ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு பிறகு அதிக ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய படம் என்றால் அது சிவகார்த்திகேயன் படம்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திற்குள் ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளியவர் சிவகார்த்திகேயன்.

தற்போது ஒரு முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்து தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகராகவும் வலம் வருகிறார்.

அவருடைய நடிப்பில் ‘வேலைக்காரன்’ படம் உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி, ரிலீசுக்கு தயாராகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களுக்கு இசை அமைத்த டி.இமானே இந்த படத்திற்கும் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி