
"காலா" திரைப்படம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் படத்தின் வேலையில் எந்த வித தொய்வும் இல்லாமல், பட வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
ஏற்கனவே "காலா" திரைப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் ஒரு சில தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் பாடகியாக அறிமுகமாகும் ஒருவரை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவந்திரநாத் பட்னாவிஸின் மனைவி அம்ருதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இது குறித்து தன்னுடைய முகநூலில் பதிவிட்ட அம்ருதா, தற்போதைய அரசிய சூழல் குறித்து ரஜினிகாந்திடம் பேசியதாக தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, நடனம் மற்றும் பாடல்களில் அம்ருதாவிற்கு ஆர்வம் இருப்பதை அறிந்து ரஜினிகாந்த் தற்போது தான் நடித்து வரும் காலா படத்தில் ஒரு பாடலை அவர் பாட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அம்ருதா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது.
ஆனால் இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவல்களும் வெளியிட வில்லை. ஏற்கனவே அம்ருதா பாலிவுட் சூப்பர்ஸ்டார் அபிஷேக் பச்சனுடன் இணைத்து ஒரு ஆல்பத்தில் பாடி ஆடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.