
சிம்புவின் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷன் மூலம் கார்த்திக் - ஜெஸ்ஸியாக வந்த சமந்தா நாக சைதன்யாவின் காதல் தற்போது நிச்சயம் முடிந்து திருமணம் வரை வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த காதல் ஜோடிக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணம் அக்டோபர் 10ஆம் தேதி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மகன், நடிகர் நாகசைதன்யா. சமந்தாவும் தெலுங்கில் 3 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தபோது காதலித்தனர். இதையறிந்த இருவீட்டு பெற்றோர்களும் அவர்கள் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர்.
இதையடுத்து சமந்தா, நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம், கடந்த ஜனவரி 29ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. இந்நிலையில் ஐதராபாத்திலுள்ள வீட்டில் அவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் பாணியில் வசித்து வருவதாக தகவல் வெளியானநிலையில் இதை யாரும் மறுக்கவில்லை. தற்போது சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் 5 படங்களில் நடித்து வருகிறார்.
வரும் அக்டோபர் 1 முதல் 10ம் தேதி வரை எந்தப் படத்துக்கும் அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. காரணம், அக்டோபர் 6ம் தேதி அவருக்கும், நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமந்தா தற்போது விஜயின் 'விஜய் 61', விஷாலின் 'இரும்புத்திரை', நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த கமிட்மெண்ட்டுகளை சமந்தா முடித்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.