பச்சை பச்சையா திட்டுறாங்க: சுஷாந்த் ரசிகர்களால் பாலிவுட் பிரபலங்கள் செய்த அதிரடி காரியம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 24, 2020, 02:00 PM IST
பச்சை பச்சையா திட்டுறாங்க:  சுஷாந்த் ரசிகர்களால் பாலிவுட் பிரபலங்கள் செய்த அதிரடி காரியம்...!

சுருக்கம்

சுஷாந்த் மரணத்தால் கடுப்பான ரசிகர்கள் பச்சை, பச்சையாக திட்டி கமெண்ட் போடுவது ஒருபுறம் என்றால், பலரும் ஆலியா பட், கரண் ஜோஹரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்துவிட்டனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 34 வயதான சுஷாந்த் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவருடைய ரசிகர்கள் இதுவரை மீளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த், இந்தியா முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். பாலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வந்த சுஷாந்த், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 

 

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பல பகீர் தகவல்கள் வெளியான. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகளின் வாரிசுகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக எழுந்துவருகிறது. இதனால் கடந்த 6 மாதமாகவே சுஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. 

 

இதையும் படிங்க:  கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

ஒருபுறம் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர், கரண் ஜோகர் உள்ளிட்ட 8 பேர் மீது, பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து வெளியான குற்றச்சாட்டுகளால் கடுப்பான சுஷாந்த் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாலிவுட்டின்  வாரிசு நடிகர், நடிகைகளை கிழி, கிழியென கிழித்தெடுத்து வருகின்றனர். 

 

சுஷாந்தை அநியாயமாக கொன்னுட்டீங்களே?... என கொந்தளித்த ரசிகர்கள்  ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். கண்டபடி குவியும் ஆபாச கமெண்ட்களால் கடுப்பாகி போன சோனம் கபூர், ஏற்கனவே தனது சோசியல் மீடியா பக்கங்களில் கமெண்ட் செக்‌ஷனை ஆப் செய்துவிட்டார். தற்போது அவருடைய ரூட்டை பின்பற்றி கரண் ஜோஹர், ஆலியா பட் ஆகியோரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செக்‌ஷனை முடங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அம்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி..? தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...!

சுஷாந்த் மரணத்தால் கடுப்பான ரசிகர்கள் பச்சை, பச்சையாக திட்டி கமெண்ட் போடுவது ஒருபுறம் என்றால், பலரும் ஆலியா பட், கரண் ஜோஹரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்துவிட்டனர். இதனால் கடந்த சில நாட்களிலேயே பாலிவுட் வாரிசு நடிகர், நடிகைகள் பலரும் தங்களது லட்சக்கணக்கான பாலோவர்களை இழந்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!