ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோவை தொடர்ந்து தற்போது நடிகை கத்ரீனா கைஃபின் போலி வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபக்கம் புதுபுது கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தாலும், மறுபக்கம் அதன் ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான். இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும்.
இதைப்பயன்படுத்தி ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். சமீபத்தில் கூட தமிழ் பாடல்களை பிரதமர் மோடியின் குரலில் மாற்றி அதனை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வந்தனர். சினிமா பாடகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மோடியை தரமான பாடகராக்கி உள்ளது AI தொழில்நுட்பம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதேவேளையில், சிலர் இதை தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் வீடியோவில் மார்பிங் செய்து வெளியிட்டனர். அந்த பெண் ஆபாச உடை அணிந்திருந்தார். அந்த வீடியோவை மார்பிங் செய்த பின் அது நிஜமாகவே ராஷ்மிகா போல இருந்ததால் பலரும் அதை உண்மை என நம்பிவிட்டனர். பின்னர் இது ராஷ்மிகாவுக்கு தெரியவர அவர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று நடிகை கத்ரீனா கைஃப் இந்த போலி வீடியோ சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் நடித்த டைகர் 3 படத்தில் டவல் அணிந்து ஒரு சீனில் நடித்துள்ளார். அந்த சீனை AI மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் சிலர் பரப்பி விட்டுள்ளனர். இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டும் விதமாக இனி போலி வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள்... வாழ்த்தோடு தளபதி 68 அப்டேட்டையும் வாரி வழங்கிய அர்ச்சனா கல்பாத்தி