காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 18, 2020, 12:25 PM IST
காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

சுருக்கம்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு  போய்விடுகின்றனர். பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.

இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'மேயாத மான்' , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்', ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 'குறத்தி ஆட்டம்'  இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கருக்கும் இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவிற்கும் காதல் என்ற வதந்தி தீயாய் பரவியது. 

இதையும் படிங்க: 42 வயதில் அம்மாவான விஜய் பட நடிகை... முதல் முறையாக குழந்தையின் புகைப்படம் வெளியீடு...!

இதனால் எங்கே தனது சினிமா கேரியர் முடிந்துவிடுமோ என்று அஞ்சிய பிரியா பவானி சங்கர், தனது உண்மையான காதலர் இவர் தான் என்று உண்மையை போட்டுடைத்தார்.  அவருடைய பாய் ஃபிரண்ட் ராஜ் என்பவரின்  பிறந்தநாளை சமீபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளார்.  அதன் போட்டோக்களை வெளியிட்டு "என் வாழ்க்கையில் எப்போதும், எல்லாமும் நீயாக இருக்கிறாய்.  உன்னை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வேன் நீ ஒரு சிறந்த மனிதன் என்று என்னுடைய வளர்ச்சிக்கு நீ தான் காரணம் என பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவிட்டார். 

இதையும் படிங்க: சீரியல் நடிகை மேக்னா விவாகரத்திற்கு காரணம் நானா?....மனம் திறந்த நடிகர் விக்கி...!

அதன் பின்னர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே ராஜ்வேல் என்பவரை காதலித்து வந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர், ராஜ்வேலுடனான காதலை முறித்துக் கொண்டதாக வதந்திகள் பரவியது. இன்ஸ்டாகிராமில் பிரியா போட்ட ஒரு பதிவால் தான் இந்த பிரேக் அப் வதந்தி கிளம்பியுள்ளது. அதில், சித்ரா பௌர்ணமி இரவு! போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு friend சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார்😀 ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல.

இதையும் படிங்க: மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி... முன்னழகை காட்டி மிரளவைக்கும் ஹாட் செல்ஃபி...!

மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.
மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு என்று பதிவிட்டிருந்தார். அதை வைத்து தான் ரசிகர்கள் பிரியா பவானி சங்கரின் காதல் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதினர். ஆனால் ராஜ்வேலும் அந்த பதிவை லைக் செய்துள்ளார். 

தற்போது தீயாய் பரவி வரும் இந்த வதந்தி குறித்தும் பிரியா பவானி சங்கர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் செல்போனை பார்த்து சிரித்த படியே இருக்கும்  போட்டோவை பகிர்ந்துள்ள அவர், தன்னை பற்றிய வதந்திகளை படிக்கும் போது இப்படித் தான் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!