போதுமட சாமி இந்த அரசியலே நமக்கு வேண்டாம்... கம்பி நீட்டிய “காலா” வால் ரஜினியின் அதிரடி...

 
Published : Jun 17, 2018, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
போதுமட சாமி இந்த அரசியலே நமக்கு வேண்டாம்... கம்பி நீட்டிய “காலா” வால் ரஜினியின் அதிரடி...

சுருக்கம்

After Kaala release Rajinikanth change his political dialogue

தான் முழுசாக நம்பியிருந்த காலா கம்பி நீட்டியதால், இனி நடிக்கும் படங்களில் அரசியல் வேண்டாம் என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலாரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் பல தரப்பினரை எரிச்சலடைய வைத்தாலும், ரஜினியின் அரசியல் வருகைக்காக உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி நினைத்தது ஒன்று, நடந்ததோ வேறொன்று.

ஆமாம், ரஜினி அரசியலுக்காக ரஞ்சித்தை பயபடுத்துவதாக சொன்னாலும், தான் சொல்லவந்த கருத்தை ரஜினி மொன்ற மாஸ் ஹீரோவை வைத்து பக்கவாகவும், அழுத்தமாக சாதாரண மக்களுக்கும் பரிமாரிவிட்டார்.

சரி விஷயத்துக்கு வருவோம், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் பிஸியாக இருக்கும் ரஜினி இப்படத்தில் படப்பிடிப்பிற்காக டார்ஜிலிங்மலைப் பகுதியில் நடந்து வருகிறது. இப்படத்தில் மொத்தம் 30 நாட்கள் மட்டுமே ரஜினி நடிக்கிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கயிருக்கிறது. இதில், ரஜினிக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வசனம், காட்சி எதிலுமே அரசியல் வேண்டாம் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கறாராக ரஜினி சொல்லிவிட்டாராம். 



கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான “காலா” படத்தில் ரஜினிகாந்த் பேசிய அழுத்தமான அனல் வீசும் அரசியல் வசனங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை, மாறாக ரஞ்சித்தை தூக்கி நிறுத்தியது. இதனால் கடுப்பான ரஜினிகாந்த். இனி வரும் படங்களிலும் அரசியலே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.  மேலும், தற்போது டார்ஜிலிங் மலைப்பகுதியில்  30 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பிறகு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் அங்கு தனது கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை அறிவிக்கலாம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறாராம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு