
குப்பையை தெருவில் வீசாமல் குப்பை தொட்டியை பயன்படுத்துங்கள் என அனுஷ்கா ஷர்மா, அருகில் ஒரு காரில் வந்த நபரிடம் அட்வைஸ் செய்து உள்ளார்
விராட் மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் காரில் சென்று கொண்டிருத்த போது அருகில் வந்த காரில் இருந்த ஒரு நபர் குப்பையை தெருவில் வீசி உள்ளார்
இதை பார்த்து கோபம் அடைந்த ஷர்மா, உடனடியாக தன் காரின் கண்ணாடியை இறக்கி அந்த நபரிடம்..எதற்காக குப்பையை கீழே போடுறீங்க...? குப்பை தொட்டியை பயன்படுத்துங்கள் என கோபமாக பேசி தன் கார் கண்ணாடியை ஏற்றி விடுகிறார்..
இதனை அனுஷ்கா ஷர்மாவின் கணவர் விராட் கோலி வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்
இந்த வீடியோ ஒருவகையில் மற்றவர்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அதே வேளையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள அர்ஹான் சிங் (குப்பையை வீசியவர்) எனது கார் கண்ணாடி வழியாக வெளியேறிய குப்பையை விட அனுஷ்காவின் வசைமொழியும், வீடியோவை வெளியிட்ட விராட் கோலியின் செயலும் படுகுப்பையாக உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.