கோடிகளில் கொட்டி கொடுத்தால் கசக்குமா?.... ஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து அனுஷ்காவின் அதிரடி முடிவு....!

Published : May 16, 2020, 02:47 PM IST
கோடிகளில் கொட்டி கொடுத்தால் கசக்குமா?.... ஜோதிகா, கீர்த்தி   சுரேஷைத் தொடர்ந்து அனுஷ்காவின் அதிரடி முடிவு....!

சுருக்கம்

இதேபோன்று அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் உள்ளிட்டோர் நடித்த “நிசப்தம்“ படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால்,  இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை,  திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே ஜோதிகா நடித்துள்ள, “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியானதில் இருந்தே  தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே தீவிர மோதல் வெடித்தது. 

இதையும் படிங்க: கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி...!

அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்' . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ஜோதிகாவை தவிர, இயக்குனர் பாரதி ராஜா, பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.கொரோனா பிரச்சனையால் தியேட்டர்கள்  ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை தயாரித்த சூர்யாவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.  இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கணவருடன் சேர்ந்து சமந்தா பார்த்த காரியம்... பொறுப்பற்ற செயலால் பொங்கி எழுந்த ரசிகர்கள்...!

இதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “பெண்குயின்” திரைப்படமும் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக இருந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்க பதிவில் உறுதிப்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

இதேபோன்று அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் உள்ளிட்டோர் நடித்த “நிசப்தம்“ படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகுந்த பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனைகள் முடிந்து தியேட்டர்களை திறக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் ஓடிடியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதை அறிந்து கொண்ட அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து “நிசப்தம்“ படத்தை வாங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Irumudi Box Office: ரவி தேஜா படத்துக்கு அள்ளிய கூட்டம்.. இருமுடி படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Music: அரை மணி நேரத்தில் இளையராஜா செய்த மாயம்.! எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.! என்ன படம் தெரியுமா?