
நடிகை ஐஸ்வர்யா ராய்:
1994 ஆம் ஆண்டு, உலக அழகி பட்டம் வென்றவர் நடிகையும், பிரபல நடிகர் அபிதப் பச்சனின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய். இதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. மேலும் மோகன் லால், பிரகாஷ் ராஜ், ரேவதி, கௌதமி போன்ற பல முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
நடித்து வெளியாகாமல் போன படம்:
இதே ஆண்டில், பாலிவுட்டின் சிறந்த இயக்குனராக இருந்த இயக்குனர் அனீஸ் பாஸ்மி, சுனீல் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரின் புதிய படமான 'ராதேஷ்யம் சீதாராம்' ஐஸ்வர்யா ராய் நடித்தார்.
ஆனால் இந்த திரைப்பட ஒரு சில காரணங்களால், பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் அவர் நடித்த போது, எடுக்கப்பட்ட நடன வீடியோ ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
புதிய அழகில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்:
தற்போது வெளியாகியுள்ள இந்த நடன வீடியோவில், புதிய அழகில் ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராய். பர்புல் நிற உடை, அதற்கேற்றவாறு அணிகலன்கள், ஹேவி மேக் அப் மற்றும் அழகிய நடன அசைவுகள் மேற்கொண்டுள்ளார்.
23 வருடத்திற்கு பின் வெளியாகியுள்ள இந்த வீடியோ... தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.