
இந்திய திரையுலகில் முடி சூடா ராணியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி தனது குடும்பத்தினர் உடன் துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீதேவி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. அதன் பின்னர் துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலின் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்ததாகவும், அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய ஸ்ரீதேவியின் மரணம், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்களையும் எழுப்பியது. அப்போது ஸ்ரீதேவியின் மரணம் விபத்து தான் எனக்கூறி துபாய் போலீசார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்து வெளியான Sridevi: Girl woman Superstar என்ற புத்தகத்தில், அவரது மரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
சத்யார்த் நாயக் என்பவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில், ஸ்ரீதேவிக்கு ரத்த கொதிப்பு இருந்ததாகவும், ஏற்கனவே இரண்டு, முறை குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ஸ்ரீதேவி மயங்கி விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்படித்தான் துபாயில் உள்ள ஓட்டல் அறையின் பாத்டப்பிலும் ஸ்ரீதேவி மயங்கி விழுந்து, மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் ஸ்ரீதேவியின் மரணம் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.