அழகில் அப்படியே அம்மாவை உறித்து வைத்து... பால் போல் ஜொலிக்கும் பிரபல நடிகை மதுபாலாவுடன் மகள்களின் அசத்தல் புகைப்படம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 04, 2020, 06:33 PM IST
அழகில் அப்படியே அம்மாவை உறித்து வைத்து... பால் போல் ஜொலிக்கும் பிரபல நடிகை மதுபாலாவுடன் மகள்களின் அசத்தல் புகைப்படம்...!

சுருக்கம்

தனது இரண்டு மகள்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்த மதுபாலா, அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். 

அழகன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மதுமிதா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த மதுவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என வளைத்து, வளைத்து அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனம் ஈர்த்தார். 

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ஜென்டில்மேன் திரைப்படம் மதுபாலாவிற்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே, 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட மதுபாலா, அதன் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். 

மதுபாலாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தனது இரண்டு மகள்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்த மதுபாலா, அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். அப்படியே அச்சு, அசலாக அம்மா போலவே அழகில் ஜொலிக்கும் மதுபாலா மகள்களின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

ச்சப்பி லுக்கில், க்யூட் சிரிப்புடன் இருக்கும் மதுபாலாவின் மகள்களின் புகைப்படங்களை காண்போரை சுண்டி இழுக்கிறது. அந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் என்னது மகளா?, நாங்க உங்க சகோதரிகள்ன்னு இல்ல நினைச்சோம் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!