
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் தெலுங்கில் பட்டையைக் கிளப்பியவர் நடிகை விஜயசாந்தி. தெலுங்கு சினிமாவில் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்தவர். சம்பளத்திலும், புகழிலும் கூட தெலுங்கு ஹீரோக்களுக்கு சற்றும் சளைக்காமல் கெத்து காட்டினார்.
1998ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த விஜயசாந்தி, இறுதியாக 2006ம் ஆண்டு வெளியான நாயுடம்மா என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திக் கொண்டார். தற்போது வெளியாகி தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ள படம் சரிலேறு நீகேவ்வறு படம் தான் விஜயசாந்தியின் ரீ-என்ட்ரி படம்.
இதையும் படிங்க: ரஜினி நடிக்க ஏங்கிய கேரக்டர் இதுதானாம்... பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்..!
தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவுடன் நடிக்க விஜயசாந்திக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 5 கோடி எனக்கூறப்படுகிறது. இதைக்கேட்ட முன்னணி நடிகைகள் பலரது காதிலும், கண்ணிலும் வயிற்றெரிச்சலில் புகையே வந்திருக்கும். ஆனால் ஹீரோக்களுக்கு நிகராக ஸ்டேண்ட் செய்யும் தைரியம் விஜயசாந்திக்கு மட்டுமே உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, கேப்டன் விஜயகாந்திற்கு நிகரா சுவற்றில் கால் வைத்து வில்லன்களை சுழற்றி அடிப்பதில் கில்லாடி. இந்நிலையில் சரிலேறு நீகேவ்வறு ஷூட்டிங் ஸ்பார்ட்டில் தனது பேமஸ் ஆன கிக்கை, அசிஸ்டேண்ட் ஒருவரிடம் செய்து காண்பிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பேண்ட், ஷர்ட் அணிந்து ஸ்டைலாக கூலிங்கிளாஸ் உடன் பக்கா மாஸாக இருக்கும் விஜயசாந்தி, ஓங்கி ஒரு உதை விட்டதும் அந்த நபர் பறந்துவிடுகிறார். சினிமாவை விட்டு விலகி 13 ஆண்டுகள் ஆனாலும், விஜயசாந்தியை விட்டு விலகாத அந்த ஸ்பீடு, கெத்து, ஸ்டைல் அனைத்தையும் ரசிகர்கள் திரும்ப, திரும்ப பார்த்து ரசித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.