முன்னணி நாயகிகள் செய்ய தயங்கும் செயலை...மேடையில் செய்து அசத்திய அதிதி ஷங்கர்..

Published : Aug 04, 2022, 12:52 PM IST
முன்னணி நாயகிகள் செய்ய தயங்கும் செயலை...மேடையில் செய்து அசத்திய அதிதி ஷங்கர்..

சுருக்கம்

திடீரென யுவன் சங்கர் ராஜாவை  மேடைக்கு அழைத்த அதிதி, அவருடன் இணைந்து விருமன் படத்தின் பாடலை பாடி செம ஆட்டம் போட்டிருந்தார் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

கார்த்தி தற்போது பொன்னியின் செல்வனில் வந்தியதேவனாக தோன்றியுள்ளார். அந்த படத்தின் டீசர் பாடல்கள் என அனைத்து விழாவிலும் கலந்து கொண்டு கார்த்தி பேசுவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வைரலாகி வருகிறது. இதற்கிடையே  தற்போது நடித்து முடித்துள்ள விரும்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மதுரையில் ராஜா முத்தையா மண்டபத்தில்  நடந்த இந்த நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தலைவர்களின் சிலைகள் தாரை, தப்பட்டை, பறையென அமர்க்களப்பட்டது.

இதில் நடிகரும் தயாரிப்பாளமான சூர்யா இயக்குனர் சங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  விழாவின் போது மேடையில் பேசிய அதிதி சங்கர், தேசிய விருது வாங்கிய சூரியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் கார்த்தி, முத்தையா உள்ளிட்ட பட குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டு அவர் அறிமுக நடிகை போல் அல்லாமல் தனக்கு முழுவதும் ஒத்துழைப்பு அழைத்து நடிப்பதற்கான பல விஷயங்களை கற்றுக் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்தார். அதோடு தன் அறிமுகத்திற்கு உதவிய 2 டி நிறுவனத்தின் உரிமையாளர்களான சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கும் தன் பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்ட அதிதி சங்க நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று கூறியவுடன் என்னுடைய அப்பா அம்மா தான் மிகவும் நம்பிக்கையாக ஊக்கமளித்தார்கள். முதல் படம்  என் அப்பாவின் ஆதரவால் இருக்கலாம் ஆனால் அடுத்தடுத்த வளர்ச்சி என்னுடைய கடின உழைப்பில் தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் திடீரென யுவன் சங்கர் ராஜாவை  மேடைக்கு அழைத்த அதிதி, அவருடன் இணைந்து விருமன் படத்தின் பாடலை பாடி செம ஆட்டம் போட்டிருந்தார் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. முன்னணி நாயகிகள் மேடையில் பர்ஃபாம் செய்ய தயங்கி வரும் வேளையில் சினிமாவிற்கு சமீபத்தில் என்ட்ரி கொடுத்துள்ள அதிதியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பின்னர் நடிகர் சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட்டு இருந்தார். முன்னதாக அம்மா, மகன் சென்டிமெண்டுடன் துவங்கும் காணொளியில் சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளில் அதோடு நாயகியின் சொக்க வைக்கும் காட்சிகளும் இடம் பிடித்துள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!