"அட்ச்சி தூக்கு" பாடலை தட்டித் தூக்கிய தல ரசிகர்கள்!! மொத்தமாக ரெக்கார்டையும் துவம்சம் செய்த சம்பவம்

Published : Dec 11, 2018, 10:44 AM ISTUpdated : Dec 11, 2018, 10:45 AM IST
"அட்ச்சி தூக்கு" பாடலை தட்டித் தூக்கிய தல ரசிகர்கள்!!  மொத்தமாக ரெக்கார்டையும் துவம்சம் செய்த சம்பவம்

சுருக்கம்

"அட்ச்சி தூக்கு" என்ற ஒரே ஒரு பாடலை வெளியிட்டு தமிழ் சினிமாவின் சோசியல் மீடியாவில் வைத்திருக்கும் மொத்த சாதனையையும் முறியடித்துள்ளனர்  தல ரசிகர்கள். 

சிவா இயக்கத்தில்  தல அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள  இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். இது அவர் பணியாற்றும் நூறாவது படமாகும். ஏற்கெனவே இமானின் வெற்றிப் பாடல்கள் மதுரையைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஆட்டம் போட வைக்கும்படியாக ‘அடிச்சு தூக்கு’ பாடல் உருவாகியுள்ளது.

“அங்காளி பங்காளி வா இனி..,ஆட்டம்தான் எப்போதும் அடி அடி அடி...மங்காத்தா கட்டை போல, இந்த வட்டாரம் நம்ம கையில் புடி புடி புடி” என அஜித்திற்கான இந்த ஒப்பனிங் பாடலை டி.இமானே பாடியுள்ளார்.

“நான் நினைச்சது எல்லாமே ஏன் நடக்குது தன்னாலே, மேல் இருக்கிற மேகம் ஓயாம பூ தூவுது எம் மேல, அட கருவா நீ பொறக்கிறே இறந்தா டண்டணக்கறே, மத்தியில கொஞ்சநாளு செம சீனா சிதற வைக்கணும், பாத்தா பதற வைக்கணும் அப்பதான்டா நீ என் ஆளு” என பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். 

பொங்கலுக்கு வெளியாகவுள்ள படங்களில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் புரொமோஷன்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போஸ்டரில் ஆரம்பித்து இசை வெளியீடு வரை ஆடி அடங்கியுள்ள நிலையில், பிள்ளையார் சுழியாக சைலண்ட்டாக ஒரே ஒரு ட்வீட் போட்டு போட்டு களமிறங்கியிருக்கிறது. 

படத்தின் புரொமோஷன் பெரியளவில் இல்லையே என விவாதங்கள் எழுந்த சொல்லப்பட்ட நிலையில் ரசிகர்களை மட்டுமே நம்பி  ‘அடிச்சு தூக்கு’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.  பாடல் வெளியாகி சோசியல் மீடியாவை வாதம் செய்து வருகிறது.  மேலும், பாடல் வெளியான 1 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!