1 மணி நேரத்தில் அட்ச்சிதூக்கி அசால்ட் செய்த விஸ்வாசம்... இணையத்தில் தரமான சம்பவம் பண்ணிய தல ரசிகர்கள்

Published : Dec 10, 2018, 08:26 PM ISTUpdated : Dec 10, 2018, 08:28 PM IST
1 மணி நேரத்தில் அட்ச்சிதூக்கி அசால்ட் செய்த விஸ்வாசம்... இணையத்தில் தரமான சம்பவம் பண்ணிய தல ரசிகர்கள்

சுருக்கம்

விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியவந்த இணையத்தில்  தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடியத்து வருகிறது.

சிவா இயக்கியுள்ள விஸ்வாசம் படம் முழுக்க முழுக்க கிராம பின்னணியில் உருவாகியுள்ளது. படம் அடுத்த வருடம் பேட்ட படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ரிலீஸை உறுதி செய்ததை தவிர எந்த அப்டேட்டும் கிடைக்காததால் தல ரசிகர்கள் செம கடுப்பில் இருந்தனர்.  

இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் அப்டேட் சரியாக 7 மணிக்கு அட்ச்சிதூக்கு  பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. "டானே டர்ராவான்  தௌலத்து கிர்ராவான் வந்தான்டா மதுரக்காரன்" என மீசையை முறுக்கிக்கொண்டு கெத்தாக தோன்றும் காட்சிகள் மட்டும் இந்த பாடலில் இடம்பிடித்துள்ளது.

சரியாக 7 மணிக்கு வெளியான பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடல் வெளியான 5 நிமிடங்களில் இந்த பாடல் 5000 கமெண்டுகளை பெற்றது. மேலும் 10 நிமிடத்தில் 1 லட்சம் லைக்குகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் அதிகம் dislikes பெற்றுள்ளது. ஒருமணி நேரம் முடிவில்,  286,339 லைக்ஸ், 38,728 dislikes  பெற்றுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!