ஏழை குழந்தைகள் படிப்பிற்காக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த நடிகர் சூர்யா! குவியும் பாராட்டு!

By manimegalai aFirst Published Feb 14, 2019, 7:08 PM IST
Highlights

நடிகர் சூர்யாவும் கார்த்தியும் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். மேலும் விடுதிகளில் தங்கி படிக்கும் வசதியும்,  செய்து கொடுத்துள்ளனர்.
 

நடிகர் சூர்யாவும் கார்த்தியும் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். மேலும் விடுதிகளில் தங்கி படிக்கும் வசதியும்,  செய்து கொடுத்துள்ளனர்.

தற்போது இலவச கல்வி வழங்க தகுதியான ஏழை மாணவர்களை அடையாளம் காணும் பணிக்காக, அரசு பள்ளி ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது...  ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்!  அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் பவுண்டேஷன் கடந்த 10 ஆண்டுகளாக துணைபுரிகிறது.

பெற்றோர்களை இழந்து, ஆதரவற்று வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.  இதுவரை சுமார் 2,500 மாணவர்கள் அகரம் அறக்கட்டளை திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

எனவே வரும்  2019ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் தகுதியும் திறமையும் வாய்ந்த,  ஏழை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை தொடராமல் போகிற மாணவர்கள் அகரம் அறக்கட்டளை தொடர்பு கொள்ளலாம் என தன்னுடைய வேண்டுகோளில் கூறியுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு பலர் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் !! pic.twitter.com/dJbIohZ9uZ

— Suriya Sivakumar (@Suriya_offl)

click me!