5 முறை தேசிய விருது வாங்கிய கலை இயக்குனரின் கண்கலங்க வைக்கும் பரிதாப நிலை! நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

By manimegalai aFirst Published May 16, 2019, 3:35 PM IST
Highlights

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளில் 50திற்கும் அதிகமான படங்களில் கலை இயக்குனராகவும், உடை அமைப்பாளராகவும், ஓவியராகவும் பணியாற்றி தேசிய விருது, தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் , கேரளா ஸ்டேட் அவார்ட் , உள்ளிட்ட பல விருதுகளை தன்னுடைய கலை திறனால் வென்றவர், பி.கிருஷ்ணாமூர்த்தி.
 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளில் 50திற்கும் அதிகமான படங்களில் கலை இயக்குனராகவும், உடை அமைப்பாளராகவும், ஓவியராகவும் பணியாற்றி தேசிய விருது, தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் , கேரளா ஸ்டேட் அவார்ட் , உள்ளிட்ட பல விருதுகளை தன்னுடைய கலை திறனால் வென்றவர், பி.கிருஷ்ணாமூர்த்தி.

திரையுலகில் தற்போதைய பல, கலை  இயக்குனர்களுக்கு முன்னோடியாக இருக்கும் இவர், இன்றிய  நிலை குறித்து, பிரபல குணச்சித்திர நடிகையும், நாடக நடிகையுமான வினோதினி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மேலும் பி.கிருஷ்ணமூர்த்திக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என முகநூல் பக்கத்தின் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

பி.கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய கலை வாழ்வில் எவ்வித சமரசமும் இன்றி நியாயமாகவும், நேர்மையுடனும் தன்னுடைய வேளையில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தியவர். இவரின் போதாத காலம் தற்போது இவரை ஆட்டி படைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும். தற்போது இவர் வாடகை வீட்டில் வறுமையில் வாடி வருவதாக, நடிகை விநோதினி  அவருடைய ட்விட்டர்  பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளது..."கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன ஓவியம், சினிமா, நவீன நாடகம் என பல துறைகளில் சிறப்பான சாதனைகள் செய்த ஓவியர் கிருஷ்ணமூர்த்தி தற்போது உடல்நலக் குறைவால் 
மடிப்பாக்கத்தில் ஒரு சிறிய வீட்டில் கடின வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். இந்த சமயத்தில் நண்பர்கள் அளிக்கும் ஆதரவு அவருக்கு பல வழிகளில் உதவி செய்வதாக அமையும்.அவருடைய வங்கிக் கணக்கு விவரங்கள் -
P.Krishnamurthy 
SB A/C 2628101000041
Canara Bank
Officers` colony, Adambakkam, Chennai-600088.
IFSC Code CNRB0002628
MICR Code 600015075

நண்பர்கள் இயன்ற பொருளுதவி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த மாத முடிவிற்குள் அவருக்கு கணிசமான உதவி கிடைக்கும் என உறுதியளித்திருக்கிறேன். அவருடைய போன்:9444733371. 

இதை தொடர்ந்து இவருக்கு உதவி செய்ய பலர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

வினோதினியின் பதிவு இதோ:

click me!