
ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றிய 55 படங்களில் 5 படங்களுக்கு தேசிய விருதுகள், 11 படங்களுக்கு மாநில விருதுகள் வாங்கிக் குவித்து சினிமாவில் நேர்மையாக இருந்த ஒரே காரணத்துக்காக தனது இறுதிக் காலத்தில் குடியிருக்க ஒரு வீடு கூட இல்லாமல் வறுமையில் வாடும் பி.கிருஷ்ணமூர்த்திதான் கடந்த சில தினங்களாக கோடம்பாக்கத்தின் ஹார்ட் டாபிக்.
இவரது வறுமை நிலையை எடுத்துச் சொல்லி ஒரு முன்னணி வார இதழ் நிதி திரட்டிவரும் நிலையில் அது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் வீடீயோ பார்த்து கதி கலங்கி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார் ‘8 தோட்டாக்கள்’ என்ற நேர்த்தியான படம் இயக்கிய ஸ்ரீ கணேஷ்.
அவரது பதிவு இதோ,...அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ. 'கலைஞர்களின் வாழ்க்கை என்னவாக ஆகிறது' என கண்ணீரும், அதே அளவு கோபமும் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு வந்தது.
எனக்கு தெரிந்ததை, பார்த்ததை வைத்து சொல்கிறேன். சினிமா எப்போதும் மோசமான மனிதர்கள் நிறைந்து கிடக்கும் இடம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், தமிழ் சினிமா மிக மோசமான சூழலில் இருக்கிறது. ஏ.வி.எம் போன்ற நிறைய தயாரிப்பாளர்கள் சினிமா எடுப்பதை விட்டு விலகி சென்றுவிட்டார்கள். உழைப்பையும், முதலீட்டையும் போடுபவர்களுக்கு - பெரும்பாலும் அது திரும்பி வருவதில்லை. அநியாய சம்பளம் வாங்கும் நடிகர்கள், புரோக்கர்கள், பொய் கணக்கு எழுதுபவர்கள் - இவர்கள் மட்டுமே சம்பாதித்து விட்டு, சினிமாவைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். 'ஒரு கலைஞன் வறுமையிடம் தோற்கக் கூடாது' என்பதே இயற்கையிடம் எனது வேண்டுதலாக இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.