
நடிகரும், நடன இயக்குநரும், பிரபல டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளருமான பரத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி கோடம்பாக்கத்தை அதிரவைத்துள்ளது.
விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு பரத் வசித்து வந்தார்.ராஜீவ் மேனன், அர்விந்த்சாமி கூட்டணியின் ’மின்சாரக் கனவுகள்’ என்ற படத்தில் குறிப்பிட்ட நடித்துள்ள இவர், ராகவா லாரன்சின் குழுவில் உள்ளார். மாற்றுத்திறனாளியான அவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் குழந்தைகள் உட்பட பல திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கும் நடனம் கற்றுக் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
35 வயதான பரத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டில் பரத் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சினிமாவில் எதுவும் சாதிக்க முடியாத விரக்தியில் பரத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் சந்தேகிக்கிறது..இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீசார், பரத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.