
முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யாவின் ’உயர்ந்த மனிதன்’ படத்திலிருந்து இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்
கோபித்துக்கொண்டு வெளியேறிய செய்தியை இயக்குநர் சூர்யாவே உறுதிப்படுத்தியுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற நேரடி தமிழ்ப்படத்தில்
நடிக்கிறார். தமிழ்வாணன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தில்
இருந்து அமிதாப் பச்சன் விலகியதாக சில செய்திகள் நடமாடிவந்தன.
அச்செய்தி குறித்து சில நாட்கள் அமைதிகாத்த எஸ்.ஜே சூர்யா நடந்த சம்பவங்கள் எது பற்றியும் விளக்காமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ...அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். ’மான்ஸ்டர்’ படத்தின் ரிலீசுக்கு பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். படப்பிடிப்பின் மூன்றாவது நாளில் அமிதாப் சார் பதிவு செய்த ட்வீட்டில் அவரது அன்பும், எங்களது உழைப்பின் மீது அவர் வைத்திருந்த மரியாதையும் தெரிந்தது. எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ்
ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.