பண உதவி கேட்கும் சகோதரி... உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரச சிகிச்சைப் பிரிவில் நடிகை விஜயலட்சுமி...

Published : Feb 23, 2019, 04:23 PM IST
பண உதவி கேட்கும் சகோதரி... உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரச சிகிச்சைப் பிரிவில் நடிகை விஜயலட்சுமி...

சுருக்கம்

விஜய், சூர்யா நடித்த ’ஃப்ரண்ட்ஸ்’, சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ பட நாயகி விஜயலட்சுமி உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஐ.சி.யு.வில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

விஜய், சூர்யா நடித்த ’ஃப்ரண்ட்ஸ்’, சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ பட நாயகி விஜயலட்சுமி உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஐ.சி.யு.வில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வந்தது.

அவர் தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 இதுபற்றி கூறிய  விஜயலட்சுமி சகோதரி உஷா தேவி ‘விஜயலட்சுமிக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். மிகுந்த பொருளாதார சிக்கலில் உள்ளோம். ஆபத்தான நிலையில் இருக்கும் விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும்‘அவர் கூறினார்.

2006-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஒரு உதவி இயக்குனர் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதுதான் அவர் தற்கொலைக்கு முயல காரணமாக பேசப்பட்டது. அதே ஆண்டு விஜயலட்சுமி தனது தந்தையையும் இழந்தார்.

இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்த விஜயலட்சுமிஇன்றைய அரசியல்வாதியும் அன்றைய இயக்குநருமான ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். அந்த திருமணம் 2007-ம் ஆண்டு நடந்து இருக்க வேண்டியது. ஆனால் திடீர் என்று ரத்தாகிவிட்டது. அதன் பின்னர் விஜயலட்சுமி வெளியில் வருவதையே குறைத்துக்கொண்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!