ஓவியா எக்ஸ்ட்ரா லைட்டு போட்டது ஏன்?: தேர்தல் சீசனை தெறிக்கவிடும் கேள்வி.

By Vishnu PriyaFirst Published Feb 23, 2019, 4:04 PM IST
Highlights

*    எளிமையாக தொழில் துவங்கும் தேசம் எனும் பட்டியலில் காங்கிரஸ் ஆட்சிகளில் 142-வது இடத்தில் இருந்த நமது நாடு பல படிகள் முன்னேறி இப்போது 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது: பி.ஜே.பி.யின் அகில இந்திய நிர்வாகி முருகானந்தம். 
 

*    எளிமையாக தொழில் துவங்கும் தேசம் எனும் பட்டியலில் காங்கிரஸ் ஆட்சிகளில் 142-வது இடத்தில் இருந்த நமது நாடு பல படிகள் முன்னேறி இப்போது 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது: பி.ஜே.பி.யின் அகில இந்திய நிர்வாகி முருகானந்தம். 

(அதிருக்கட்டும் தல, ஆனா உங்க டெல்லி லாபி கொடுத்த டார்ச்சரால...தென்னிந்தியாவானது இந்தியாவுல இருந்தே பல படிகள் பின்வாங்குற மாதிரி ஃபீலாகுதாம்! இதுக்கு என்ன சொல்றீங்க?)

*    விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர். அவரது உடல் நலன் குறித்து விசாரித்தேன். அதற்காகவே அவர் இல்லம் வந்தேன். அரசியல் பேச வரவில்லை: ஸ்டாலின். 

(அப்டீங்களா தளபதி, நாங்க கூட.....சமீபத்துல கேப்டன் மகன் பிரபாகரன் ‘எங்கப்பா ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம்’ன்னு சொல்லியிருந்தார். அது எப்படி? ஒரு ஸ்டாலின் இங்கேயிருக்கேன், மிச்சம் 999 ஸ்டாலின் எப்படி இருக்காங்கன்னு பார்க்கத்தான் போனீங்களோமுன்னு நினைச்சுப்புட்டோம். சாரி ராசா)

*    ஓவியா நடித்திருக்கும் ‘ஒரு மாதிரி படமான’ 90 ml படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம் தன் பெயரை போஸ்டர் உள்ளிட்ட எங்கும் வெளியிட தயங்கியிருக்கிறது. சொல்லப்போனால் மறைத்திருக்கிறது: செய்தி. 

(ஏம்மா ஓவியா, அவிய்ங்க கம்பெனி பெயரை போடுறதுக்கே அசிங்கப்பட்டு மறைக்கிறாய்ங்க. ஆனா நீ என்னான்னா, எதையெல்லாம் மறைக்கணுமோ அதையெல்லாம் எக்ஸ்ட்ரா லைட் போட்டு காட்டுறது என்ன நியாயம்? தேர்தல் நேரத்துல தெறிக்கவிடுற மாதிரி கேட்டோம் பார்த்தீங்ளா?)

*    எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களும், குறிக்கோள்களும் தினகரனிடம் இல்லை. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை பிளந்த பழியை மட்டுமே அவரால் சுமக்க முடியும்: நாஞ்சில் சம்பத்.

(அண்ணே, அந்த நாள் ஞாபகமிருக்குதாண்ணே?...’அம்மாவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் கோடானு கோடி வாக்குகளை இரு கைகளிலும் அள்ளி எடுத்து, இனி வரும் தேர்தல்களில் கழகத்தை வெற்றிப் பாதையில் மட்டுமே இட்டுச் செல்ல திராணியுடைய பொன்மனச்செல்வன் நம் தினகரன்’ அப்படின்னு நீங்க வீதிக்கு வீதி முழங்குனதெல்லாம்?

அதெல்லாமே பொய்யா நாஞ்சில்ல்ல்ல்ல்.....)

*    அ.தி.மு.க. கூட்டணி ஒன்றும் பலம் வாய்ந்தது கிடையாது. ஆனால் இவர்களாகவே அப்படியொரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி, தங்களின் சந்தர்ப்பவாத கூட்டணியை வெற்றிபெற வைக்கப் பார்க்கிறார்கள்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். 

(அப்படியாண்ணே, உங்க கூட்டணி மட்டும் அப்படியே வெள்ளக்காரன் வெளியேறுனதுல இருந்து ஒண்ணு மண்ணா கட்டுக்குழையாம இருக்குது. அவிய்ங்க சந்தர்ப்பவாதம்னா, நீங்க சாதக சூழல்! அம்புட்டுதேம்.) 

click me!