வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று அனைத்து இந்திய மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார்.
இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் பிரபல நடிகரும், அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இவருடைய இரண்டாவது மனைவி ராதிகா சரத்குமாரும் முதல் மனைவி சாயாவிற்கு பிறந்த நடிகை வரலட்சுமி சரத்குமாரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று அனைத்து இந்திய மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் தனது அப்பா சரத்குமாருக்கு நேரில் வாழ்த்து சொல்ல முடியாத நிலையில் இருப்பதால், தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தைக்காக ஒரு காணொளி ஒன்றையும் வரலட்சுமி வெளியிட்டுள்ளார். எங்களுடைய வாழ்க்கையின் ஒரு மையப் புள்ளியாக திகழ்ந்துவரும் உங்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும்.
உங்கள் பக்கத்தில் நான் இந்த பிறந்த நாளில் இல்லை என்பதனால் எனக்கும் சேர்த்து ஒரு கேக் துண்டை நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறி தனது தந்தைக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சரத்குமார் கடந்த 1984ம் ஆண்டு சாயா என்பவரை மணந்துகொண்டார், அதன் பிறகு வரலட்சுமிக்கு சுமார் 15 வயது இருந்தபோது சாயாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை மணந்துகொண்டார்.
ஸ்தம்பித்து போன ஹாலிவுட்.. 63 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய வேலைநிறுத்தம் - என்ன ஆச்சு?