’அந்த மாதிரி பசங்களுக்கு சரியான செருப்படி’...வனிதா விஜயகுமார் ஷேர் செய்த விவகாரமான வீடியோ...

Published : Oct 17, 2019, 01:00 PM IST
’அந்த மாதிரி பசங்களுக்கு சரியான செருப்படி’...வனிதா விஜயகுமார் ஷேர் செய்த விவகாரமான வீடியோ...

சுருக்கம்

வாத்து வனிதா, வத்திக்குச்சி வனிதா உட்பட அவருக்கு பல பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டன. சமைத்த உணவை வெள்ளந்தியாய் நக்கிப்பார்த்த அவரது புகைப்படம் ஒன்று பல்லாயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு பரபரப்பானது. துவக்கத்தில் மிக சீக்கிரமே பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேற்றப்பட்ட திரும்பவும் அழைக்கப்பட்டு இல்லத்தை மீண்டும் கலகலப்பாக்கினார். அதனால் அவர் தொடர்பான மீம்ஸ்கள் குவிந்தவண்ணம் இருந்தன.

‘பிக்பாஸ்’இல்லத்தில் இருந்தபோது வலைதளங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்ட நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்து  பெண்களைக் கிண்டல் செய்பவர்களுக்கு இது ஒரு செருப்படியான பதிவு என்று பாராட்டியுள்ளார்.

தனது மிரட்டல் அதிகார தொனியாலும், ஓவர் அலட்டலாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது வலைதள வல்லுநர்களால் மிக அதிகமாய் கலாய்க்கப்பட்டவர் நடிகை வனிதா விஜயகுமார். வாத்து வனிதா, வத்திக்குச்சி வனிதா உட்பட அவருக்கு பல பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டன. சமைத்த உணவை வெள்ளந்தியாய் நக்கிப்பார்த்த அவரது புகைப்படம் ஒன்று பல்லாயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு பரபரப்பானது. துவக்கத்தில் மிக சீக்கிரமே பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேற்றப்பட்ட திரும்பவும் அழைக்கப்பட்டு இல்லத்தை மீண்டும் கலகலப்பாக்கினார். அதனால் அவர் தொடர்பான மீம்ஸ்கள் குவிந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில் வனிதாவைப்போலவே கிண்டலுக்கு ஆளான பெண்களுக்காக வக்காலத்து வாங்கும் ஒரு பெண்ணின் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வனிதா, ...சமூக வலைத்தளத்தில் உள்ள கிண்டல் செய்பவர்களுக்கும் இது ஒரு செருப்படி என்றும், உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பாருங்கள். பயனற்ற நபர்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம், என்றும் பதிவிட்டுள்ளார் . இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வழக்கமாக  ’செருப்படி பதிவு தோழி’என்று கமெண்ட் போடுபவர்கள் இந்தப் பதிவுக்கு என்ன பதில் போடுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
நிலம், நீர், காற்று, பணம்-எல்லாத்துக்கும் மதிப்பு கூடிக் கொண்டே போகுது: - மிரட்டலாக வெளியான ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட டீசர்!