தயவு செஞ்சு உதவி செய்யுங்கள்! நடிகை தேஜஸ்ஸ்ரீ வெளியிட்ட உருக்கமான வீடியோ!

Published : Aug 02, 2019, 01:21 PM ISTUpdated : Aug 02, 2019, 01:22 PM IST
தயவு செஞ்சு உதவி செய்யுங்கள்!  நடிகை தேஜஸ்ஸ்ரீ வெளியிட்ட உருக்கமான வீடியோ!

சுருக்கம்

தமிழில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமான, தேஜஸ்ஸ்ரீ கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காத நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் நடிக்கும் வாய்ப்பு கேட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை தேஜஸ்ஸ்ரீ,  தமிழில் 'ஒற்றன்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் அர்ஜூனுடன், 'சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா... " என பாடலுக்கு நடனமாடி பல ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து,  நடிகர் விஜய் நடித்த  'மதுர' , 'தகதிமிதா',  'நீயே நிஜம்', '23 ஆம் புலிகேசி' போன்ற பல படங்களில் இரண்டாவது ஹீரோயின் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் 'பரஞ்சோதி' என்கிற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக இவரை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை. 

 இந்த நிலையில் இவர் மிகவும் உருக்கமாக வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  

இந்த வீடியோவில்,  என்னை நீங்க பல படங்களில் பார்த்திருப்பீர்கள்...  கடைசியாக 'பரஞ்சோதி' படத்தில் நடித்தேன்.  அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.  காரணம், என் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.  அவரை அருகில் இருந்து கவனிக்க வேண்டி இருந்தது.  இப்போது அவர் இல்லை நான் மீண்டும் நடிக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன்.  பெரிய கேரக்டர் வேண்டாம்.  சின்ன கேரக்டராக இருந்தாலும் நல்ல கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன். மேலும்  வெப் சீரியசாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.  நான் நடித்தே ஆக வேண்டும் தயவு செய்து தனக்கு உதவுமாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.  மும்பையைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?
சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!