
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான ஒரு சில வாரங்களிலேயே, சேரன் இங்கேயும் இயக்குனர் என்பதை நிரூபிக்க பார்க்கிறார் என கூறினார். இதில் இருந்து சரவணனுக்கு சேரனை, பிடிக்காது என்பது தெரிந்தது.
மேலும், ஏதேனும் ஒரு காரணத்தை கூறி, சேரன் பெயரையும் சரவணன் நாமினேட் செய்து வந்தனர். அதே போல் சரவணன் மீது சேரனுக்கும் ஒரு வித கோபம் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரோமோவில், சரவணன் 'போடு ஆட்டம் போடு' டாஸ்கில், சின்ன கவுண்டர் விஜயகாந்த் வேடம் போட்டு நடனமாடினார்.
இதுகுறித்து பேசிய சேரன், டான்ஸ் ஆடும் போது மட்டுமே விஜயகாந்த் போல், அவர் நடந்து கொண்டதாகவும் மற்ற படி அவர் விஜயகாந்த் போல் இல்லை என கூறினார். இதற்கு சரவணன் நீங்கள் கூட ரஜினி வேடம் போட்டு கொண்டு, ரொம்ப காமெடியாக இருந்தீர்கள் என காரம் சாரமாக கூறினார்.
இதற்கு சேரன், அதற்கு நான் என்ன பண்ண முடியும் என கேட்கிறார். பின் சரவணன் அவர் என்ன சொல்கிறார் என்பதை சரியாக சொல்ல சொல்லுயா என கேப்டன் தர்ஷனை பார்த்து சொல்கிறார். வாயா... போயா... என கூற வேண்டாம் என சேரன் சொல்ல, அப்படிதாண்டா பேசுவேன் என கூட சொல்லுவேன் என பேச, சரவணன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து சண்டைக்கு வருகிறார்.
இதனால் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இந்த வாரம் கமல் முன் பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்பதும் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.