Tamannaah Bhatia: கண்ணை கட்டும் ஹாட் கவர்ச்சியில்... வெகேஷனை என்ஜாய் செய்யும் தமன்னா! வைரலாகும் வீடியோ...!

Published : Dec 02, 2021, 02:48 PM IST
Tamannaah Bhatia: கண்ணை கட்டும் ஹாட் கவர்ச்சியில்... வெகேஷனை என்ஜாய் செய்யும் தமன்னா! வைரலாகும் வீடியோ...!

சுருக்கம்

நடிகை தமன்னா (Tamannaah) தற்போது வெகேஷனுக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்து வெளியிட்டுள்ள செம்ம ஹாட் வீடியோ (video) ஒன்று வைரலாகி வருகிறது.  

நடிகை தமன்னா தற்போது வெகேஷனுக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்து வெளியிட்டுள்ள செம்ம ஹாட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் - நடிகைகள் பொதுவாக தங்களுடைய பட பணிகளை முடிந்த கையேடு ஒரு வாரமாவது வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய வெகேஷனை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் கூட, பூஜா ஹெக்டே, ஆண்ட்ரியா தங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாடியதை தொடர்ந்து, தற்போது தமன்னா தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்.

நடிகை தமன்னா, விஜய், அஜித், உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமானவர். தற்போது இவரது கை வசம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 6 படங்கள் உள்ளது. இவர் நடிப்பில் ஏற்கனவே டிஸ்னி ஹாட் ஸ்டாரின் நடித்த, 'நவம்பர் ஸ்டோரீஸ்' வெப் சீரிஸுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால், வெப் சீரிஸ்களிலும் நடிக்க தமன்னா ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது திரைப்பட பணிகள் இல்லாததால், அம்மணி வெகேஷனுக்கு பறந்துள்ளார். அதே போல் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருப்பதால், அவ்வப்போது தன்னுடைய விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது படு ஹாட்டான கிளாமர் உடையில்... லைட்டாக இடுப்பை காட்டி அளவான மேக்அப் போட்டு கழுத்தில் மூன்று செயின் போட்டுள்ளது போன்று இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட், வீடியோ ஒன்று வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விடுமுறை நாளை தன்னுடைய ஆரோக்கியம் குறித்தும் நியூட்ரிஷியன் ஒருவரிடம் கலந்தாலோசித்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்களையும் இவர் வெளியிட்டுள்ளார். விரைவில் ஆரோக்கியம் குறித்த பல தகவல்களையும் தமன்னா பகிர்ந்து கொள்வதாக தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!