
தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் 'சுப்பிரமணியபுரம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்' என்கிற பாடலில் கண்ணை உருட்டி உருட்டி ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இந்த படத்துக்காக இவருக்கு சிறந்த நடிக்காகான விருதுகளும் கிடைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன் என பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். அதே போல் தெலுங்கில் மூன்று பாடல்களையும் பாடியுள்ளார்.
ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், இவருக்கு உடனடியாக திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.
இவருடைய காதலர் விகாஸ், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றி வருகிறாராம். முதலில் நட்பில் துவங்கிய இவர்களது உறவு பின் காதலாக காதலாக மாறியதும்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதால், இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். இதைதொடர்ந்து சுவாதி-விகாஸ் திருமணம் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், திருமண வரவேற்ப்பு 2 ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்தை தொடர்ந்து சுவாதி, இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தாவில் வசிக்க உள்ளதாகவும், இதனால் திரைப்படங்களில் நடிக்க இவர் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.