
சுவாதியை 'சுப்ரமணியபுரம்’ ஸ்வாதி என்று சொன்னால்தான் இன்றளவும் தெரியும் என்கிற அளவுக்கு ஒன் ஃபிலிம் ஒண்டர்தான் அவர்.
அதற்குப் பிறகு தமிழில் ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என சில படங்களில் நடித்தாலும் எதுவும் எடுபடவில்லை. மலையாளத்தில் இவர் நடித்த ‘ஆமென்’ படம் சூப்பர் ஹிட்டானது. அந்த சமயத்தில் இவரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பைலட்டாக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த விகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.
காதலுக்கு இருவீட்டாரும் க்ரீன் சிக்னல் காட்டவே சினிமாவுக்கு முழுக்குப் போட்டவர்தான் சுவாதி. தற்போது ஸ்விம்மிங் பூலில் அதுவும் புத்தாண்டும் அதுவுமாய் முழுக்குப் போட்ட படங்கள் இணையங்களில் வைரலாகிவருகின்றன.
படங்களில் கிளாமர் ட்ரெஸ் அணியமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததால் மார்க்கெட் டல்லடித்து ஒதுங்கிக் கொண்ட ஸ்வாதியின் இப்படங்கள் அவரது அனுமதியுடன் அடுத்த பட வாய்ப்புகளுக்காக பகிரப்பட்டதா அல்லது தமிழ் ராக்கர்ஸ் மாதிரி ஏதாவது கிராக்கர்ஸ் வெளியிட்டார்களா என்பது தெரியவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.