
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிலர் திடீரென இறந்து போக ரசிகர்கள் சோகத்தில் மூழ்குவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகையும், எம்.பி.யு.மான சுமலதாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா, நடிகையான இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பி.யாக உள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முரட்டு காளை, கழுகு மற்றும் திசை மாறிய பறவைகள், அழைத்தால் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 4ம் தேதி சுமலதாவிற்கு லேசான தலைவலி, தொண்டை எரிச்சல் இருந்துள்ளதுள்ளது. இதனால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட சுமலதா கொரோனா சிகிச்சை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: அடுத்த ஆப்பு இவங்களுக்குத் தான்... பட்டியலை வெளியிட்டு பகீர் கிளப்பிய வனிதா...லிஸ்டில் இருப்பது யார் தெரியுமா?
56 வயதாகும் சுமலதா தன்னைத் தானே வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்தார். தற்போது கொரோனாவில் இருந்து சுமலதா மீண்டு வந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உங்களுடைய பிரார்த்தனையால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளேன். 3 வார தனிமைப்படுத்த்லை மன வேதனையுடன் அனுபவித்து முடித்துள்ளேன். கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வார ஓய்விற்கு பிறகு மக்கள் பணிக்கு விரைவில் திரும்ப உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.