“ரொம்ப சாரி லட்சுமி மேடம்”... வனிதா செய்த தப்பிற்காக மன்னிப்பு கோரிய எலிசபெத் ஹெலன்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 23, 2020, 07:58 PM IST
“ரொம்ப சாரி லட்சுமி மேடம்”... வனிதா செய்த தப்பிற்காக மன்னிப்பு கோரிய   எலிசபெத் ஹெலன்...!

சுருக்கம்

அந்த வீடியோவை பார்த்த பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புகோரியுள்ளார். 

வனிதா - பீட்டர் பால் 3வது திருமண  விவகாரம் குறித்து நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார். இப்பொழுது தான் அந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார். 

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா, நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எவ்வித கருத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என கடுப்பாக பதிலளித்துள்ளார். இதையடுத்து தனது ட்வீட்டை நீக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் ஆன்லைன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலானது.

ஆரம்பம் முதலே வனிதா கோபமாகவே பேச்சை ஆரம்பித்தார். நீ யாரு என் வாழ்க்கையில் தலையிட, உன்னை கிழிக்க தான் இந்த ஆன்லைன் இண்டர்வியூவுக்கு வந்தேன். நீ என்ன பெரிய ஐகோர்ட் ஜட்ஜா?. சரி தான் போடி. உனக்கு குடும்பம் இல்லையா. நீ இயக்குநராக இருந்தால் படம் எடுடி என் வாழ்க்கையில் ஏன் தலையிடுகிற . நீ ரொம்ப பத்தினி. ஒருத்தனுக்கு ஒருத்தினு டிராமா போடாத. ஒரு புருஷன் இருப்பதால் நீ பெரிய ஒழுங்கா. என்கிட்ட பதில் சொல்லுடி, தைரியமா சொல்லுடி. நீ யாருன்னு எனக்கு தெரியும் . கிழிச்சி தொங்கவிட்டுடுவேன். உன் புருஷன் ஒரு கேடுகெட்ட வெட்கம் கேட்ட ஜென்மம். நான் உன்ன கேவலப்படுத்திடுவேன். முடிஞ்சா என்மேல ஆக்‌ஷன் எடுடி. நான் அப்படி தான் டி பேசுவேன் என சகட்டுமேனிக்கு தரக்குறைவான வார்த்தைகளை அள்ளி வீசியிருந்தார். 

அந்த வீடியோவை பார்த்த பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புகோரியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய ஹெலன், லட்சுமி மேடம் எங்களுக்காக தான் வனிதாவிடம் பேசினார். நான் கேட்டுக்கொண்டதால் தான் அவர் பேசினார். ஆனால் வனிதாவோ அவரை மிகவும் தரக்குறைவாக பேசி அவரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க. வயசுக்கு கூட மரியாதை கொடுக்காமல் வார்த்தைகளை பயன்படுத்தியது மனசுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. வனிதா செய்ததற்காக நான் லக்ஷ்மி மேடத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்களால் தான் உங்களுக்கு இவ்வளவு பெரிய அசிங்கம் ஏற்பட்டிருக்கிறது என மனம் வருந்தி மன்னிப்புகோரியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!