
'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சுகன்யா, இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு, பூமி பூஜை நடப்பதை முன்னிட்டு தன்னுடைய பக்தியை வெளிப்படுத்தும் விதமாக ராமரின் உருவ படத்தை வெற்றியில் வரைந்து, புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 300 க்கும் அதிகமான படங்களில் நடித்து, 80 மற்றும் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகர் சுகன்யா. நடிப்பை தாண்டி, பரதநாட்டிய கலைஞர், மியூசிக் கம்போஸர், வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் என பல துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.
மேலும், கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர், கடவுள் பத்தி ஆல்பங்கள் சில வற்றிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில், மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.என்றும் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதில், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பூமி பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் பிரதமர் மோடி, சிறப்புரை ஒன்றையும் ஆற்றினார்.
இந்நிலையில், ராமர் மீது... தனக்குள்ள பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில், நடிகை சுகன்யா, நெற்றியில் ராமரின் உருவப்படத்தை வரைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.