
இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட நடிக்காமல், நடிகை என பெயரெடுத்தவர் ஸ்ரீரெட்டி. திரைப்பட வாய்ப்பு கேட்டு அணுகிய போது, வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை பயன்படுத்தி கொண்டார்கள் என பல தெலுங்கு பிரபலங்கள் மீதும், தமிழ் பிரபலங்கள் மீதும் பல்வேறு குற்ற சாட்டுகளை அடுக்கி வந்தார்.
சமீப காலமாக அதீத கவர்ச்சியை காட்டாமல், டபுள் மீனிங் வார்த்தைகளை கொட்டி, ஒரு மார்க்கமாக தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், ஏற்கனவே பிரபல இயக்குனருக்கு வாங்க ஜிஎஸ்டி பண்ணிடலாம் என பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி தற்போது, நடிகர்களுக்கு சாப்பாட்டை விட, லிப்ஸ்டிக் சாப்பிடத்தான் ரொம்ப பிடிக்கும். அதிக லிப்ஸ்டிக் கொடுப்பவர்களுக்கு படவாய்ப்பு கொடுக்கப்படுகிறது என, சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் சூசகமாக, திரைக்கு பின்னல் முத்தமிடுவது பற்றி ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு கண்டன நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.
ஸ்ரீரெட்டி தற்போது, அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'ரெட்டியின் டைரி' என்கிற படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் பல பிரபலங்களின் முக திரை கிழியும் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.